உடுமலை : முருகன் வழிபாட்டை முதன்மையாகக்கொண்டு, கிராமங்களில் மக்கள் ஒன்றிணைந்து தைப்பூச விழாவை கொண்டாடுவர். உடுமலை, எஸ்.வி.புரம், பி.வி., லே-அவுட்டில், அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து மூன்று நாட்கள் வழிபாடு நடத்தினர். வீதியில் தைப்பூச வழிபாட்டை அடையாளப்படுத்தும் தேர் கோலம் வரைந்தும், நாள்தோறும் இரவில் ஒவ்வொரு வீடுகளிலிருந்தும் உணவு சமைத்தும் வைத்து, அப்பகுதி மக்கள் கும்மியடித்தனர்.
முருகன் பாடல்களை பாடியும், கதைகளை கூறியும் கொண்டாடினர். தமிழாசிரியர் சரவணன், ஆன்மிகத்தோடு தொடர்புடைய அறிவியல் குறித்து, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இறுதியில் அனைத்து வீடுகளிலிருந்தும் படைத்த உணவுகளை பரிமாறிக்கொண்டு, மக்கள் சமூக ஒற்றுமையை வெளிப்படுத்தினர்.
Advertisement