மப்பேடு:கடம்பத்துார் ஒன்றியம், பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீராமன் மனைவி ராஜாத்தி, 48.
கணவர் இறந்து விட்ட நிலையில் இவரது மொபைல் போனுக்கு, 2022ம் ஆண்டு, நவம்பர் 17ம் தேதி மேட்டுக்கண்டிகை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் மகன் காமேஷ், 29, தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது அவரிடம், உன் கணவர் பெயரில் 50 லட்சம் காப்பீட்டு தொகை வந்துள்ளதாக கூறி ஆதார் கார்டு, பேங்க் பாஸ்புக் கேட்டுள்ளார்.
பின் வங்கி கணக்கிற்கு 20 ஆயிரம், 75, ஆயிரம், 50 ஆயிரம என மொத்தம் 1,45 லட்சம் ரூபாய் பணம் செலுத்தும்படி கூறியுள்ளார்.
பொய்யான தகவல் கூறி பணம் பெற்றது தெரிய வரவே பணத்தை கேட்ட ராஜாத்தியிடம் பணம் தர மறுத்து காமேஷ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதுகுறித்து ராஜாத்தி அளித்த புகாரையடுத்து, வழக்கு பதிந்த மப்பேடு போலீசார், காமேஷ் என்பவரை கைது செய்து, திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய ரவி, சுகுனேஷன், வேழவேந்தன் ஆகிய மூன்று பேரையும் தேடி வருவதாக மப்பேடு போலீசார் தெரிவித்தனர்.
Advertisement