பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மாதவரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக சென்ற, இரண்டு 'எய்ச்சர்' லாரிகளை மடக்கி சோதனையிட்டனர்.
அதில், எவ்வித ஆவணங்களும், அனுமதியும் இன்றி, சவுடு மண் ஏற்றி வந்தது தெரிந்தது.
இதையடுத்து, இரண்டு லாரிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், போலீசாரின் வாகன சோதனையின்போது, அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, லாரி ஓட்டுனர்கள் பொன்னேரியைச் சேர்ந்த கவுதம், 33, கடலுாரைச் சேர்ந்த ஆனந்தன், 34, ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.
Advertisement