வால்பாறை : வால்பாறையில் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் சார்பில், நகர், முடீஸ், காடம்பாறை, கவர்க்கல், சோலையாறுநகர் உள்ளிட்ட, 11 இடங்களில் மொபைல்போன் டவர்கள் வைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்பாலான இடங்களில் மொபைல்போன் சிக்னல் கிடைப்பதில்லை.
இந்நிலையில், குரங்குமுடி, முருகன், சிவாகாபி, ஸ்ரீராம் ஆகிய எஸ்டேட்களில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் இல்லாததால், தொழிலாளர்கள் அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் அழைக்க கூட முடியாத நிலையில் உள்ளனர்
தொழிலாளர்கள் கூறுகையில், 'எஸ்டேட் பகுதியில், பி.எஸ்.என்.எல்., சிக்னல் இல்லை. மொபைல்போன் இருந்தும் பயன்படுத்த முடியாமல் தவிக்கிறோம். இந்த பிரச்னைக்கு தீர்வு காண, குரங்குமுடி எஸ்டேட் பகுதியில் பி.எஸ்.என்.எல்., டவர் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
Advertisement