சென்னை:மோட்டார் வாகன சட்டத்தை மீறி, கட்சி, ஜாதி பெயர் உள்ளிட்ட அடையாளங்களுடன் பொருத்தப்பட்டு இருந்த, 37 ஆயிரம் வாகன பதிவு எண் பலகைகளை போலீசார் அகற்றினர்.
வாகனங்களில் பதிவு எண் பலகையின் அளவு, எழுத்து வடிவம், அதன் அளவுகள் குறித்து, மோட்டார் வாகன சட்டத்தில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
இதை மீறுவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
ஆனால், வாகன ஓட்டிகள், மோட்டார் வாகன சட்டத்தை மீறி, வாகன பதிவு எண் பலகையில், கட்சி, ஜாதி உள்ளிட்ட அடையாளங்களுடன், அநாகரிகமாக பொருத்தி இருந்தனர்.
இந்த விதிமீறல் தொடர்பாக, சென்னை முழுதும் போலீசார், அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இரண்டு வாரங்களில், ஒவ்வொரு போக்குவரத்து காவல் நிலைய எல்லைகளிலும், மூன்று இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, 37 ஆயிரம் வாகனங்களை பிடித்து, அந்த இடத்திற்கே 'ஸ்டிக்கர்' கடை ஊழியர்களை வரவழைத்து, புதிதாக வாகன பதிவு எண் பலகை பொருத்தினர். இதற்கான தொகை, வாகன ஓட்டிகளிடம் வசூலிக்கப்பட்டது.
Advertisement