பொள்ளாச்சி : சிரியா மற்றும் துருக்கியில் இயற்கை பேரிடரில் இறந்த மக்களுக்கு, கோடங்கிப்பட்டி பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
சிரியா மற்றும் துருக்கியில் நிலநடுக்கம் மற்றும் தொடர் நில அதிர்வுகள் ஏற்பட்டன. அதில், ஆயிரக்கணக்கானோர் உயிர் இழந்தனர். இந்த இயற்கை பேரிடரின் காரணமாக, உயிர் நீத்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு, பொள்ளாச்சி அருகே கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்தது. மாணவர்கள், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். அதன்பின், தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள், மவுன அஞ்சலி செலுத்தினர்.