திருத்தணி:திருத்தணி அடுத்த, மாம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம், 65. இவருக்கு, திருத்தணி- -- ஆர்.கே.பேட்டை மாநில நெடுஞ்சாலை அகூர் பேருந்து நிறுத்தம் அருகே, 10 ஏக்கர் நிலம் உள்ளது.
இந்த நிலத்தில், இரு ஆண்டுகளுக்கு முன் முனிரத்தினம் தைலச் செடிகள் வைத்து பராமரித்து வருகிறார். தற்போது தைல மரங்களாக வளர்ந்து உள்ளன.
இந்நிலையில், நேற்று மதியம் மர்மமான முறையில் தைல மரத் தோப்பில் தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அவ்வழியாக சென்றவர்கள் திருத்தணி தீயணைப்பு நிலையத்திற்கும், நிலத்தின் உரிமையாளர் முனிரத்தினம் என்பவருக் கும் தகவல் தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து திருத்தணி தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமை யிலான தீயணைப்பு வீரர்கள் சென்று ஒரு மணி நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
அதற்குள், 5 ஏக்கர் தைல மரங்கள் தீயில் கருகின. மீதமுள்ள ஐந்து ஏக்கர் நிலத்தில் இருந்த தைல மரங்கள் தப்பின.
தைல தோப்பில் எப்படி தீ விபத்து ஏற்பட்டது என்பது குறித்து திருத்தணி போலீசார் விசாரிக்கின்றனர்.