அன்னுார் : அன்னுார் தாலுகாவில், ஏழு ஊராட்சிகளில், இன்று சிறப்பு வேளாண் வளர்ச்சி திட்ட முகாம் நடக்கிறது.
தமிழக அரசு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தில், தேர்வு செய்யப்பட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு, இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்படுகின்றன. தரிசு நிலம் மேம்படுத்தப்படுகிறது. தரிசு பகுதியில் இலவசமாக போர்வெல் அமைத்து தரப்படுகிறது. சொட்டு நீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது.
அன்னுார் ஒன்றியத்தில், ஒட்டர் பாளையம், பிள்ளையப்பம்பாளையம், பச்சாபாளையம், அல்லபாளையம் ஆகிய நான்கு ஊராட்சிகளிலும், சர்க்கார் சாமக் குளம் ஒன்றியத்தில், வெள்ளமடை, அக்ரஹார சாமக் குளம், அத்திப்பாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளிலும் சிறப்பு முகாம் நடக்கிறது. விவசாயிகள் இந்த முகாமில் பங்கேற்று, சிறு குறு, விவசாயிகளுக்கான சான்று, சொட்டுநீர் பாசனம் அமைப்பதற்கான விண்ணப்பம், உழவன் செயலி செயல் விளக்கம் ஆகியவற்றை பெறலாம்.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி துறை, வேளாண் துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விவசாயிகள் இம்முகாமில், பங்கேற்று பயன்பெறலாம் என அறிக்கையில்தெரிவித்துள்ளனர்.