போலீஸ் செய்திகள்

Added : பிப் 08, 2023 | |
Advertisement
தனியார் பஸ் தகுதிச்சான்று ரத்துமறையூரை சேர்ந்த மதன்லால்,19. இவர், உடுமலையில் தங்கி பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார். கடந்த, 6ம் தேதி இவர், கோவை - பழநி செல்லும் தனியார் பஸ்சில் படிக்கட்டில் நின்று சென்ற போது, கைநழுவி கீழே விழுந்ததில், பஸ் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
 போலீஸ் செய்திகள்




தனியார் பஸ் தகுதிச்சான்று ரத்து



மறையூரை சேர்ந்த மதன்லால்,19. இவர், உடுமலையில் தங்கி பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாமாண்டு படித்து வந்தார்.

கடந்த, 6ம் தேதி இவர், கோவை - பழநி செல்லும் தனியார் பஸ்சில் படிக்கட்டில் நின்று சென்ற போது, கைநழுவி கீழே விழுந்ததில், பஸ் சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு கல்லுாரி மாணவர் மடத்துக்குளத்தை சேர்ந்த ஆல்வின் அபிேஷக், 19, லேசான காயத்துடன் தப்பினார். கோமங்கலம் போலீசார் டிரைவர், நடத்துனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், தனியார் பஸ்சில் வேக கட்டுப்பாட்டு 'சீல்' உடைத்து ஓட்டியது தெரியவந்தது. இதனால், பஸ்சின் தகுதிச்சான்று ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதிகளவு பயணிகளை ஏற்றிச் சென்றதற்காக டிரைவர் மற்றும் கண்டக்டரின் லைசென்ஸ் தற்காலிக ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது, என, வட்டார போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.


தேனீ கொட்டி டிரைவர் பலி



வால்பாறை அடுத்துள்ள, லோயர்பாரளை எஸ்டேட் பகுதியை சேர்ந்தவர், மாரிமுத்து, 43; டிரைவர். இவர், நேற்று மாலை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி அருகே நடந்து சென்ற போது, எதிர்பாராதவிதமாக அங்கிருந்த தேன்கூடு கலைந்து, நுாற்றுக்கும் மேற்பட்ட தேனீக்கள் அவரை கொட்டியது. இதில், மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து அவரது சகோதரி பழனியம்மாள் கொடுத்த புகாரின் பேரில், வால்பாறை போலீசார் மற்றும் வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.


லாட்டரி விற்றவர் கைது



ஆனைமலை, மீனாட்சிபுரம் ரயில்வே கேட் அருகே போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். சந்தேகப்படும் படி நின்ற நபரை பிடித்து விசாரித்த போது, கேரள மாநிலம் சித்துார் தாலுகா நெல்லிமேட்டை சேர்ந்த சலாவூதீன்,32 என்பதும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரிகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 600 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


தற்கொலை குறித்து விசாரணை



ஆனைமலை, திவான்சாபுதுாரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்,50. இவருக்கும், முத்துலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி, 13 வயதில் மகள் உள்ளார். இருவருக்கும், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கடந்த, எட்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். மனைவி, குழந்தையை பிரிந்த மனவேதனையில் இருந்த ராதாகிருஷ்ணன், வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X