கோவை : தேசிய அளவிலான செஸ் போட்டி, பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லூரியில் நாளை துவங்கி, வரும் 16ம் தேதி வரை நடக்கிறது.
கோவை மாவட்ட செஸ் சங்கம் மற்றும் மகாலிங்கம் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி சார்பில், 'எம்.பி.எல்' 42வது தேசிய அளவிலான செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது.
பொது மற்றும் மகளிர் என இரு பிரிவுகளில் கீழ் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் பங்வேறு மாவட்டங்களில் இருந்து, பொது பிரிவில் 28 அணிகளும், பெண்கள் பிரிவில், 14 அணிகளும் பங்கேற்கின்றன.
இப்போட்டியின் ஒவ்வொரு பிரிவிலும், வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1.25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இப்போட்டியில் பல கிராண்ட்மாஸ்டர்கள் பங்கேற்கின்றனர். இந்தியாவின் முன்னணி அணிகள் பங்கேற்கின்றன.