கோவை : தேசிய மூத்தோர் தடகளப்போட்டியில், கோவை விஷ்ணு வித்யாலயா பள்ளி தாளாளர் மூன்று தங்கம் வென்றார்.
தேசிய அளவிலான 'பசிபிக் மாஸ்டர்ஸ் அதலெடிக் சாம்பியன்ஷிப்' தடகளப்போட்டிகள் கோவாவில் ஜன., 29ம் தேதி முதல் பிப்., 2ம் தேதி வரை நடந்தன.
இப்போட்டியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து, 250க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் பங்கேற்று பல்வேறு வயது பிரிவுகளின் அடிப்படையில் போட்டியிட்டனர்.
மூத்த வீரர்களுக்கு, ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி வட்டு எறிதல், ஹேமர் எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில், கோவை, பாரதி நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ விஷ்ணு வித்யாலயா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் ராமசாமி, 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் பங்கேற்றார்.
இதில், வட்டு எறிதல், ஈட்டி எறிதல், ஹேமர் எறிதல் ஆகிய மூன்று போட்டிகளில், தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.