பொன்னேரி:தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத் துறையின் வாயிலாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நாய்களுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நாளை, மீஞ்சூரில் நடைபெற உள்ளது.
மீஞ்சூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில், காலை 9:00 மணி முதல், மதியம் 12:00 மணி வரை நடைபெற உள்ளது.
நாய்களை வளர்ப்போர் முகாமில் பங்கேற்று, நாய்களுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.
நாய் வளர்ப்பு, பிராணிகள் வதை தடுப்பு சட்டம், வெறிநோய் அறிகுறிகள் மற்றும் அதன் தடுப்பு முறைகள் குறித்த விழிப்புணர்வினையும் பெற்றுக் கொண்டு, மனிதர்களுக்கு வெறிநோய் பரவாமல் தடுப்போம் என பொன்னேரி கோட்ட கால்நடை பராமரிப்புத் துறை தெரிவித்து உள்ளது.