கோவை : தேசிய அளவிலான 'நேஷனல் சீரிஸ்' டென்னிஸ் போட்டி, காளப்பட்டி ரோடு லிவோ ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் பிப்., 6ம் தேதி முதல், 12ம் தேதி வரை நடக்கிறது.
கோவை மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில், அகில இந்திய டென்னிஸ் சங்கத்தின் 16 வயதுக்குட்பட்டோருக்கான நேஷனல் சீரிஸ் டென்னிஸ் போட்டி கோவையில் நடக்கிறது.
இதில், 16 வயதுக்கு உட்பட்ட மாணவ - மாணவியருக்கு, ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இப்போட்டியில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, டில்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 140க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.