பொன்னேரி:பொன்னேரி அடுத்த, பெரியகரும்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு, 38. இவரது மகன், அபினேஷ்வரன், 11, பொன்னேரியில் உள்ள தனியார் பள்ளியில், 6ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளிக்கு சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பியபோது, வழியில், 200 ரூபாய் பணத்தை கண்டெடுத்தார்.
வீட்டிற்கு சென்று தன் தந்தையிடம், சாலையில் பணம் கண்டெடுத்ததை தெரிவித்து, அதை தவறவிட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறினார்.
அதை தொடர்ந்து, பாபு தன் மகனை அழைத்துக் கொண்டு, பொன்னேரி காவல் நிலையம் சென்று, அங்குள்ள காவலர்களிடம் அதை ஒப்படைத்தார்.
சிறிய தொகை என்றாலும், சிறுவன் செயலை கண்டு, போலீசார் பாராட்டி அனுப்பி வைத்தனர்.