கோவை : காந்திபுரம் - சத்தி ரோட்டில், பெண்களுக்கென பிரத்யேக 'தநைரா' எனும் ஜவுளி ேஷாரூம் திறப்பு விழா நேற்று நடந்தது.
நகைகள், கைக்கடிகாரங்கள், கண் பராமரிப்பு கண்ணாடிகள் மற்றும் பாரம்பரிய உடைகள், 8 பிரபலமான பிராண்டடு விற்பனை நிலையங்களை, டைட்டன் கம்பெனி நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் நேற்று திறந்து வைத்தார்.
7 ஆயிரம் சதுரடியில் அமைந்துள்ள தநைரா ஷோரூமில், கைவினை புடவை, பிளவுஸ் மற்றும் குர்தா செட் என, ஏராளமான துணி கலெக் ஷன் உள்ளது. திருமண விழாக்களுக்கு தேவையான பிரத்யேக பிரிவும் இங்கு உள்ளது.
ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு, வரும் 14ம் தேதி வரை, 20 ஆயிரம் ரூபாய் மதிப்பிற்கு பர்ச்சேஸ் செய்பவர்களுக்கு, தங்க நாணயம் வழங்கப்படுகிறது.
விழாவில் டைட்டன் கம்பெனியின் நிர்வாக இயக்குனர் வெங்கட்ராமன் பேசுகையில், '' ஆர்.எஸ்.புரம், டி.பி.ரோடு, காந்திபுரம், புரோசோன் மால், கணபதி, அவிநாசி ரோடு, சாய்பாபா காலனி ஆகிய இடங்களில் 8 கிளைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.
டைட்டன் மண்டல வர்த்தக தலைவர் (தெற்கு) ஷரத், தநைரா முதன்மை செயல் அலுவலர் அம்புஜ் நாராயண், வர்த்தக அலுவலர் விஷ்ணுகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Advertisement