கோவை : மகாராஷ்டிராவில் நடந்த, தேசிய ஏரோஸ்கேட்டோபால் போட்டியில், ஆஸ்ரம் பள்ளி மாணவர்கள் இரண்டு தங்கம் வென்றனர்.
ஏரோ ஸ்கேட்டோபால் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில், தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்தது.
இதில், மாணவ மாணவியருக்கு 10, 12, 14 18 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில், 15 மாநிலங்களில் இருந்து, 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டனர்.
தமிழக அணி சார்பில், 74 மாணவர்கள் வெவ்வேறு பிரிவுகளில் போட்டியிட்டனர். கோவை ஆஸ்ரம் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் ஜெயிஷ்னு மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் அலிப் ஷா ஆகியோர், தமிழக அணிக்காக விளையாடினர்.
இதில், சப் ஜூனியர் பிரிவில் ஜெயிஷ்னு மற்றும் சீனியர் பிரிவில் அலிப்ஷா ஆகியோர் தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். இப்போட்டியில், தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில், நேற்று முன்தினம் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement