கோவை : கே.பி.ஆர்., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியின், 'ஏவியேசன்' மற்றும் 'ரோபோடிக்ஸ்' கிளப் மாணவர்கள், சென்னை, இந்திய தொழில்நுட்ப கழகம் சார்பில் நடத்தப்பட்ட, தொழில்நுட்ப போட்டியில் கலந்து கொண்டனர்.
தேசிய அளவில், 'சாஸ்திரா 23' என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த போட்டியில், நாட்டின் முன்னணி கல்லுாரிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், 'ரோபோ ஓசன்' என்ற பிரிவில், கே.பி.ஆர்., கல்லுாரியின் ஐந்துக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று, முதல் மூன்று இடங்களை பெற்று, சாதனை படைத்துள்ளன.
இதேபோல், ஹைதராபாத்தில், சைதன்யா பாரதி கல்லுாரி நடத்திய ரோபோட்டிக் போட்டியிலும், முதல் இரண்டு இடங்களை பெற்றுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை, கல்லுாரி முதல்வர் அகிலா பாராட்டினார்.
அவர் பேசுகையில், ''தேசிய அளவில் கிடைத்த இந்த வெற்றி, கே.பி.ஆர்., கல்லுாரி மாணவர்களின் திறமையையும், கல்லுாரியின் தரத்தையும் பறைசாற்றுகிறது,'' என்றார்.
Advertisement