மீஞ்சூர்:மீஞ்சூர்- - வண்டலுார் இடையே, 62 கி.மீ., தொலைவிற்கு வெளிவட்ட சாலை அமைந்து உள்ளது. இந்த சாலை வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கின்றன.
மேற்கண்ட சாலையில் இருந்து, அருகில் உள்ள கிராமங்களுக்கு செல்ல இணைப்பு சாலைகளும் அமைக்கப்பட்டு உள்ளன.
கிராமங்களுக்கு செல்லும் வழித்தடம் குறித்து, சர்வீஸ் சாலைகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளன.
இந்த பெயர் பலகைளில் கிராமங்களின் பெயர்கள் எழுத்து பிழையுடன் இருக்கின்றன.
'மடியூர்' என்பதற்கு பதிலாக 'மோதியூர், கொடிப்பள்ளம்' என்பதற்கு பதிலாக 'கோடிப்பள்ளம், மாபுஸ்கான்பேட்டை' என்பதற்கு பதிலாக 'மாபுஸ்காபேட்' என பல்வேறு இடங்களில், இதுபோன்ற எழுத்து பிழைகளுடன் பெயர் பலகைகள் உள்ளன.எழுத்து பிழைகளால் வாகன ஓட்டிகள் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகின்றனர்.
குறிப்பாக புதிதாக இந்த சாலையில் பயணிப்பவர்கள் எழுத்துப் பிழைகளுடன் உள்ள பெயர்களால் வழித்தடம் மாறி பயணிக்கின்றனர்.
மீஞ்சூர்- - வண்டலுார் சாலையில் எழுத்துப் பிழைகளுடன் உள்ள கிராமங்களின் பெயர் பலகைகளை சரியாக எழுதி வைத்திட வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement