கோவை : கிருஷ்ணம்மாள் கல்லுாரியின் வைர விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி, கல்லூரி வளாகத்தில் நடந்தது.இப்போட்டியில் ஆறு அணிகள் லீக் முறையில் போட்டியிட்டு வருகின்றன.
லீக் சுற்றுப்போட்டி முடிவுகள்
துாத்துக்குடி ஹோலி கிராஸ் பள்ளி அணி, 65 - 46 என்ற புள்ளிக்கணக்கில் சேலம் செயின்ட் ஜோசப் பள்ளி அணியையும்; கோவை சி.சி.எம்.ஏ., அணி 77 - 59 என்ற புள்ளிக்கணக்கில், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் பள்ளி அணியையும், சென்னை வித்யோதயா பள்ளி அணி, 49 - 30 என்ற புள்ளிக்கணக்கில், விருதுநகர் சத்ரியா பள்ளி அணியையும் வீழ்த்தின.
லீக் சுற்று மூன்று போட்டிகளின் முடிவில், ஹோலி கிராஸ் மற்றும் சி.சி.எம்.ஏ., அணிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன.
Advertisement