அரண்வாயல்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது அரண்வாயல்.
இந்த சாலை வழியே தினமும் அரசு, தனியார், பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலை பஸ், கனரக வாகனம், இலகு ரக வாகனம், இரு சக்கர வாகனம் என தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகி்ன்றன.
இந்த நெடுஞ்சாலையில் இளைப்பாறும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வருகி்னறனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
நெடுஞ்சாலையில் உலா வரும் கால்நடைகளை கட்டுப்படுத்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி., உத்தரவிட்டும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சிய்ம காட்டி வருகி்னறனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் உலாவரும் கால்நடைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கி்னறனர்.