திருவூர்:திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அரண்வாயல் பகுதியிலிருந்து, திருவூர் வழியாக கூவம் ஆற்றின் கரையோரம் புட்லுார் செல்லும் நெடுஞ்சாலை உள்ளது.
இந்த நெடுஞ்சாலையோரம் உள்ள மின் கம்பங்கள் பெரும்பாலும் சாய்ந்த நிலையில் உள்ளன.
இதனால், இவ்வழியே வாகனங்களில் செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள் புதர் சூழ்ந்து காணப்படுகிறது. இதுகுறித்து பலமுறை மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுககவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, மாவட்ட நிர்வாகம் புட்லுார் செல்லும் நெடுஞ்சாலையோரம் சாய்ந்து ஆபத்தான நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்கவும் முட்புதர்களை அகற்றவும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.