பிராமணர் சமுதாயத்தின், பிரஹலாத் ஜோஷியை முதல்வராக்க, ஆர்.எஸ்.எஸ்., முயற்சிப்பதாக குற்றம் சாட்டிய, ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, மந்த்ராலயா மடத்தின் சுபுதேந்திர தீர்த்த சுவாமிகள் பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக, அவர் கூறியதாவது:
சமுதாயத்தின் அமைதியை குலைக்கும் நோக்கில், குமாரசாமி பேசுகிறார். ஜாதி அரசியல் ஒழிய வேண்டும். யார் முதல்வர் ஆக வேண்டும், ஆகக்கூடாது என்பதை வாக்காளர்கள் தீர்மானிப்பர். இந்த விஷயத்தில் குமாரசாமி பேச்சு அர்த்தமற்றது.
இவரும் தெய்வ பக்தர். பிராமணர் சமுதாயத்தை பற்றி, எப்போதும் தரம் தாழ்ந்து பேசியவர் அல்ல.
பிராமணர் சமுதாயத்தில் தகுதியானவர்கள், மக்களுக்காக தொண்டு செய்தால், அவர்கள் முதல்வராக எந்த தடையும் இல்லை.
பிராமணர் சமுதாயத்தினரும் முதல்வராகலாம் என்பது, அரசியல் சாசன அம்சங்களில் ஒன்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -