மாண்டியா-சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், ரவுடிகள் அரசியல் கட்சிகளில் இணைய ஆர்வம் காண்பிக்கின்றனர். இரண்டு ரவுடிகள், ம.ஜ.த.,வில் இணைந்தனர்.
கர்நாடக சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. கட்சித்தாவல் அதிகரிக்கிறது. எந்த கட்சியில் சீட் கிடைக்கும் என பலரும், தேடி அலைகின்றனர்.
இதற்கிடையில் ரவுடிகளும், அரசியலில் நுழைய ஆர்வம் காண்பிக்கின்றனர். ஏற்கனவே காங்கிரஸ், பா.ஜ.,வில், சில ரவுடிகள் சேர்ந்தனர்.
இது குறித்து, கடுமையாக விமர்சித்த ம.ஜ.த.,விலும், ரவுடிகள் சேர்ந்துள்ளனர்.
மாண்டியா மாவட்டம், மத்துார் போலீஸ் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள வாலிபர்கள் வருண் கவுடா, பிரசாந்த் ஆகியோர், எம்.எல்.ஏ., தம்மண்ணா முன்னிலையில், நேற்று அக்கட்சியில் இணைந்தனர்.