பரமக்குடி-பரமக்குடி அருகே கூனன்குளம் கிராமத்தில் 7 ஏக்கரில் சீமை கருவேல மரங்கள் தீப்பற்றிஎரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
பிடாரிசேரி அருகே கூனன்குளம் கண்மாயில் நேற்று மாலை 5:00 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டு சீமை கருவேல மரங்கள் பற்றி எரிந்தன. தொடர்ந்து வேப்பங்குளத்தில் இருந்து தீ பரவி கூனன்குளம் வரை சென்றது.
பரமக்குடி தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் இன்றி தப்பிய நிலையில், சீமை கருவேல மரங்கள் குறித்து வருவாய்த்துறையினர் கணக்கிட்டு வருகின்றனர். பார்த்திபனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.