சாயல்குடி--சாயல்குடி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து ராமநாதபுரம் செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில் பாசன கண்மாய் கரைப்பகுதியில் அரை கி.மீ.,க்கு கால்நடைகளின் சாணம் கொட்டப்பட்டு குவிந்துள்ளது.
அப்பகுதியில் கால்நடை வளர்ப்போர் சாண குவியலை சாயல்குடி கண்மாய் கரையில் கிழக்கு கடற்கரை சாலையோரம்அதிகளவில் குவித்துஉள்ளதால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. மழை காலங்களில் சாணக்குவியலில் தண்ணீர் தேங்கி அசுத்தமாக மாறுகிறது.
சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் இதனை கண்டுகொள்ளாததால் தொடர்ந்து அதிகளவில் கொட்டப்படுவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
எனவே பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement