ஆர்.எஸ்.மங்கலம்-ஆர்.எஸ்.மங்கலம் வள்ளுவர் தெரு சந்திரன்மகன் குமார் 28. இவர் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவிகளை தனது ஆட்டோவில் அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டுஉள்ளார்.
மாணவிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோவை சில இளைஞர்கள் தினமும் பின் தொடர்ந்து வந்துள்ளனர். இதனால் ஆட்டோ டிரைவர் குமார் இளைஞர்களை எச்சரித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர்கள் குமாரை சரமாரியாக தாக்கியதில் படுகாயம் அடைந்தார். குமார் புகாரில் ஆர்.எஸ்.மங்கலம் நடுத்தெரு ரபிக் மகன் அப்துல்லா 19, பரக்கத் வீதி காஜா மகன் ஆஷிக் 24, ஆசாத் தெரு அத்தாகிர் மகன் நவ்புல் 23, ஆகியோர் மீது ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் எஸ்.ஐ., குமரேசன் வழக்கு பதிந்தார்.