முதுகுளத்தூர்--முதுகுளத்துாரில் கடைகளின் முன்பு உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும், என பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி எச்சரித்துள்ளார்.
முதுகுளத்தூர் பேரூராட்சி பகுதியில் கடலாடி முக்கு ரோட்டில் இருந்து காந்தி சிலை, ஒன்றிய அலுவலகம் வழியாக அபிராமம் முக்கு ரோடு வரை 200க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. தற்போது நெடுஞ்சாலைத்துறை சாலையில் இருபுறங்களிலும் கடைகள் முன்பு ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது.
முதுகுளத்தூர் அரசு மருத்துவமனையில் துவங்கி பஸ் ஸ்டாண்ட், பஜார், தேரிருவேலி முக்கு ரோடு, காந்தி சிலை வரை சாலையின் இருபுறத்திலும் நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.5.42 கோடியில் கழிவுநீர் கால்வாய், பேவர்பிளாக்சாலை அமைக்கும் பணி எட்டு மாதங்களாக நடக்கிறது.
இந்நிலையில் ஒரு சில இடங்களில் பணிகள் நிறைவடையாமல் உள்ளது. கடைகள் முன்பு அமைக்கப்பட்ட நடை பாதையை ஏராளமானோர் ஆக்கிரமித்து கடைகள் அமைத்துஉள்ளனர். இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்புகளை சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்கள் அகற்ற வேண்டும்.
தவறினால் போலீஸ் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும், என செயல் அலுவலர் மாலதி எச்சரித்தார்.
Advertisement