தொண்டி,-உடல்நிலை பாதிப்போர், விபத்தில் சிக்குவோருக்கு அவசர கால உதவிக்காக ஆம்புலன்ஸ் 108 திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் தினமும் ஏராளமானோர் பயனடைகின்றனர். ஆனால் அவசரத்திற்கு போன் செய்தால் ஆம்புலன்ஸ் வருவதில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது.
தொண்டி அருகே முகிழ்த்தகம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் 40. தொண்டி பஸ்ஸ்டாண்ட் அருகே டூவீலரில் சென்ற போது மற்றொரு டூவீலர் மோதியதில் தலையில் படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்ஸ் 108க்கு தெரிவித்தனர். நீண்ட நேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் தனியார் ஆம்புலன்ஸ்சில் ராமநாதபுரத்திற்கு அனுப்பினர்.
தொண்டியை சேர்ந்த மாலிக் கூறுகையில், அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் 108 பயனில்லாமல் உள்ளது. தொண்டியில் உடனடியாக தனியார் ஆம்புலனஸ்சில் செல்லலாம். ஆனால் கிராமங்களில் அந்த வாய்ப்பு இல்லை. ஆம்புலன்ஸ் 108ஐ நம்பி கிராம மக்கள் உள்ளனர்.
எனவே விபத்து ஏற்பட்ட இடங்களுக்கு உடனடியாக ஆம்புலன்ஸ்செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.