ஆப்பனுார் கூட்டுறவு கடன் சங்கத்தில் பா.ஜ., முற்றுகை சங்க தலைவர் விளக்கம்

Added : பிப் 08, 2023 | |
Advertisement
கடலாடி-கடலாடி அருகே ஆப்பனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.ஆப்பனுார் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில்நேற்று கடன் வழங்கும் முகாம் நடந்தது. அப்போது அங்கு பா.ஜ., மாவட்ட செயலாளர் வெற்றிமாலை தலைமையில் வந்த பா.ஜ.,வினர் விவசாயிகளுக்கு முறையாக பயிர் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்க
 ஆப்பனுார் கூட்டுறவு கடன் சங்கத்தில் பா.ஜ., முற்றுகை சங்க தலைவர் விளக்கம்



கடலாடி-கடலாடி அருகே ஆப்பனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வலியுறுத்தி பா.ஜ.,வினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

ஆப்பனுார் வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில்நேற்று கடன் வழங்கும் முகாம் நடந்தது. அப்போது அங்கு பா.ஜ., மாவட்ட செயலாளர் வெற்றிமாலை தலைமையில் வந்த பா.ஜ.,வினர் விவசாயிகளுக்கு முறையாக பயிர் கடன் உள்ளிட்ட கடன்கள் வழங்க வலியுறுத்தி முற்றுகையிட்டனர்.

பின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒன்றிய தலைவர் கோபாலகிருஷ்ணன் உட்பட ஏராளமான பா.ஜ.,வினர் கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின் கடன் வழங்கும் மேளாவில் தரையில் அமர்ந்து முற்றுகைபோராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலாடி கள அலுவலர் விஜயராமலிங்கம் பா.ஜ.,வினருடன் பேச்சு வார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர். ஆப்பனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க தலைவர் முனியசாமி பாண்டியன், கூட்டுறவு சங்க செயலாளர் செந்தூர் பாண்டியன் ஆகியோர் கூறியதாவது:

நடப்பு (2022-23) ஆண்டில் பயிர் கடனாக ரூ.3 கோடியே 38 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை கடன் ரூ.2 கோடியே 67 லட்சம், நகை கடன் ரூ.10 கோடியே 38 லட்சம் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் வழங்கியுள்ளோம். கடந்த 11 ஆண்டுகளாக ஆப்பனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம்லாபத்தில் இயங்கி வருகிறது.

இதற்கான பாராட்டு சான்றிதழை சமீபத்தில் கலெக்டரிடம் பெற்றுஉள்ளோம்.

நேற்று நடந்த கூட்டுறவு கடன் சங்க மேளாவில் கால்நடை கடனுக்காக 13 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஆப்பனூர் கூட்டுறவு சங்கத்தில் உரிய, முறையான பயனாளிகளுக்கு கடன் வழங்கி வருவதை சேவையாக செய்து வருகிறோம், என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X