ராமநாதபுரம்-வெளி மாவட்டங்களில் இருந்து திராட்சை பழம் வரத்து குறைந்துள்ளதால் கருப்பு திராட்சை கிலோ ரூ.150, பச்சை ரூ.100க்கு விற்கப்படுகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் காய்கறி, பழங்கள் சாகுபடி செய்கின்றனர்.
இதனால் மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து காய்கறி, பழங்களைமொத்தமாக வாங்கி வந்து ராமநாதபுரம் சந்தைகளில் வியாபாரிகள் விற்கின்றனர்.
தற்போது பனிப்பொழிவு, வெயிலின் தாக்கத்தால் திராட்சை பழங்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் கிலோ ரூ.70க்கு விற்ற பச்சை ரூ.100க்கும், கருப்பு திராட்சை ரூ.150க்கும், பன்னீர் திராட்சை ரூ.80க்கும் விற்கப்படுகிறது.
வெயிலின் தாக்கம் துவங்கியுள்ளதால் வரும் நாட்களில் விலை மேலும் விலை உயர வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் கூறினர்.