சென்னை, சென்னையில் உள்ள ஜெயா கல்விக் குழுமம் சார்பில் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், மத்திய கல்வி அமைச்சகம், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் மற்றும் ஜெயா கல்விக்குழுமம் சார்பில், வேலை வாய்ப்பு முகாம், நாளை காலை 8:30 மணிக்கு நடக்கிறது.
இதில், 50க்கும் மேற்பட்ட முன்னணி பல் துறை நிறுவனங்கள், தங்கள் நிறுவனங்களில் காலியாக உள்ள 3,000க்கும் மேற்பட்ட பணியிடங்களை பூர்த்தி செய்யும் முனைப்பில் உள்ளன. இந்த நேர்காணலுக்கு, புகைப்படம், கல்வி சான்றிதழ்கள், சுய விபரக்குறிப்புகளை கொண்டு வர வேண்டும். இதில் பங்கேற்ற எந்தவித கட்டணமும் இல்லை.
இதற்கு போக்குவரத்து வசதிகள், பூந்தமல்லி, ஆவடி, திருவள்ளூர், நெமிலிச்சேரி ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
மேலும், விபரங்களுக்கு, திருநின்றவூர், ஜெயா பொறியியல் கல்லுாரியை அணுகவோ அல்லது 93611 - 94459, 81488 - 04210 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் செய்யலாம்.
Advertisement