ஆன்மிகம்
வேதவல்லி தாயார் புறப்பாடு: வேதவல்லி தாயார் புறப்பாடு - மாலை 5:30 மணி, வேதவல்லி தாயார் ஆஸ்தானம் - மாலை 6:15 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.
நர்த்தன விநாயகர் அபிஷேகம்: சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம் - மாலை 4:15 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
யாகசாலை முதல்கால பூஜை: வடபழநி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் நிறைவடைந்து ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு யாகசாலை முதல் கால பூஜை துவக்கம் - மாலை 5:00 மணி. இடம்:வடபழநி.
ஆராதனை விழா: பகவான் யோகி ராம்சுரத்குமாரின் 22வது ஆராதனை. உற்சவர் அபிஷேகம், காலை 10:00 மணி. அன்னதானம்: மதியம் 12:00 மணி. பரதநாட்டியம்: செல்வி சந்தியா ஷங்கர் - மாலை 6:00 மணி. இடம்: அபயம், யோகி ராம்சுரத்குமார் பஜனாஸ்ரமம், 121, 8வது குறுக்குத் தெரு, கபாலி நகர், ஆதனுார், கூடுவாஞ்சேரி.
சாய் வழிபாடு: பாபாவுக்கு பாலாபிஷேகம், அலங்கார ஆராதனை: காலை 10:30 மணி முதல். இடம்: சச்சிதானந்த சத்குரு சாய்பாபா தியான மையம், பள்ளிக்கரணை.
ராகவேந்திரர் பூஜை: மாலை 6:00 மணி முதல். இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.
மண்டல பூஜை
பொது
இலவச பிராண சிகிச்சை பயிற்சி வகுப்பு: மதியம் 2:00 முதல் மாலை, 4:00 மணி வரை. இடம்: ராஜ் பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், 2110, மேடவாக்கம் - மாம்பாக்கம் பிரதான சாலை, மாடம்பாக்கம். தொடர்புக்கு: 98844 52258.
கண்காட்சி: 'சந்தை' கிராப்ட் பஜார். கண்காட்சி மற்றும் விற்பனை. காலை 11:00 முதல். இடம்: சி.இ.ஆர்.சி., வளாகம், கலாசேத்ரா சாலை, பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர்.