வாலாஜாபாத்:காஞ்சிபுரம் அடுத்த ஏனாத்துார் ஏரிக்கரை கூட்டுசாலையில், சிட்டியம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பிரதான சாலையில் இருந்து, 2 கி.மீ., நீளத்தில் ஒன்றிய சாலை உள்ளது.
இச்சாலையின் குறுக்கே, தென்னேரி மற்றும் கரூர் பொதுப்பணித் துறை ஏரிகளுக்கு செல்லும் நீர் வரத்து கால்வாய் தரைப்பாலங்கள் உள்ளன.
இந்த தரைப்பாலங்களில், ஆங்காங்கே பெரிய அளவில் ஓட்டை ஏற்பட்டு சேதமடைந்துள்ளன.
இதை, சீரமைக்க யாரும் முன் வரவில்லை. இதனால், அந்த தரைப்பாலத்தில் இருந்த ஓட்டையின் அளவு அதிகரித்து உள்ளது.
அந்த தரைப்பாலத்தை கடந்து செல்லும் இரு சக்கர வாகனம் மற்றும் பல தரப்பு வாகன ஓட்டிகள், பள்ளத்தில் விழுந்து, எழுந்து செல்லும் அவலம் அரங்கேறி வருகிறது.
எனவே, தரைப்பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
Advertisement