திருவாடானை-திருவாடானை அருகே மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டதால் மனுக்கள் கொடுக்க சென்ற மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
திருவாடானை அருகே சிறுமலைக்கோட்டை கிராமத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் முதியோர் உதவி தொகை, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், நலதிட்ட உதவிகள் வழங்கபடும் என்று அறிவிக்கபட்டிருந்தது. ஆனால் நேற்று கூட்டம் நடக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
வருவாய்த்துறையினர் கூறுகையில், அவசர வேலையாக கலெக்டர் வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் மக்கள் குறை தீர்க்கும் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை. விரைவில் மறு தேதியில் கூட்டம் நடைபெறும், என்றனர். கலெக்டர் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கபட்டதால் நேற்று ஏராளமானோர் மனு கொடுக்க சென்று ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.
Advertisement