சென்னை, சென்னை மாநகராட்சி மற்றும் தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சென்னை மாவட்டம் சார்பில், முதல்வர் கோப்பைக்கான போட்டிகள் நடந்து வருகின்றன.
பள்ளி மாணவ - மாணவியருக்கான, மாவட்ட அளவிலான சிலம்ப போட்டிகள், கீழ்ப்பாக்கத்தில் உள்ள நேரு பார்க்கில் நடக்கின்றன.
கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, ஒற்றை சுருள்வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு மற்றும் இரண்டை கொம்பு வீச்சு என, ஐந்து வகையான சண்டை பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. முதல் நாளில், பள்ளி மாணவியருக்கான போட்டிகள் மட்டும் நடத்தப்பட்டன.
அதில், சென்னை மாவட்டத்தின் பல பள்ளிகளில் பயிலும், 570 மாணவியர், ஒவ்வொரு பிரிவுகளிலும் உற்சாகமாக பங்கேற்று, தனித்திறமையை வெளிப்படுத்தினர்.
போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு, அரசு சார்பில் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் முதலிடங்களை பிடித்த மாணவியர், சென்னையில் நடக்கவுள்ள மாநில போட்டியில் பங்கேற்கவும் தகுதி பெற்று உள்ளனர்.
இன்று மற்றும் நாளை நடக்கும் பள்ளி மாணவருக்கான போட்டிக்கு இதுவரை, 900 பேர் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து, 14, 15ம் தேதிகளில் கல்லுாரி மாணவ - மாணவியருக்கான போட்டிகளும், 21, 22ல் பொதுப் பிரிவினருக்கான போட்டிகள் நடைபெற உள்ளன.
Advertisement