திருவாடானை-தீர்த்தாண்டதானம் கடற்கரையில் சிமென்ட் தளம் அமைக்க பக்தர்கள் வலியுறுத்தினர்.
தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சர்வதீர்த்தேஸ்வரர் கோயில் உள்ளது. ராம பிரான் இவ்வழியே சென்ற போது தாகம் ஏற்படவே அகத்தியர் தீர்த்தம் உண்டாக்கி கொடுத்தாக ஸ்தல வரலாறு உள்ளது.
ராமேஸ்வரம் செல்லும்சுற்றுலா பயணிகள் இக்கோயிலுக்கு சென்று பூஜை செய்து வழிபட்டு செல்கின்றனர்.
இது தவிர ஆடி மற்றும் தை அமாவாசை நாட்களில் மாதந்தோறும் வரும் அமாவாசையிலும் ஏராளமான பக்தர்கள் கடலில் புனித நீராடி பரிகார பூஜை செய்வது வழக்கம். அவ்வாறு கடலுக்குள் புனித நீராட செல்லும் பக்தர்கள் தங்களது ஆடைகளை களைந்து கடலுக்குள் வீசுவதோடு, சில்லரை காசுகளையும் வீசுவது வழக்கம். பக்தர்கள் வீசிய ஆடைகள் கடற்கரையில் ஒதுங்கி சேறும், சகதியுமாகிறது.
புல்லக்கடம்பன் ஊராட்சி தலைவர் மாதவி கூறுகையில், தீர்த்தாண்டதானம் கடலில் அமாவாசை நாட்களில் வெளி மாவட்ட பக்தர்கள் நீராடுகிறார்கள். சகதியில் நடந்து செல்வதால் மிகவும் சிரமம் அடைகின்றனர்.
எனவே கடலுக்குள் நீராட செல்லும் வகையில் சிமென்ட் தளம் அமைத்து படிகட்டுகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.
Advertisement