சென்னை, சென்னை மாநகராட்சியில் உள்ள பேருந்து சாலைகள், 78 'மெக்கானிக் ஸ்வீப்பர்' வாகனங்களை கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை மாநகராட்சி எல்லையில், 387 கி.மீ., நீளத்தில், 471 பேருந்து சாலைகள், 5,270 கி.மீ., நீளத்தில், 34 ஆயிரத்து 640 உட்புற சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதில், பேருந்து சாலைகளில் இரவு நேரத்தில் துாய்மை பணி நடக்கிறது. சாலையோரம் மற்றும் மையத் தடுப்பு ஓரங்களில், மெல்லிய மணல், துாசி படிந்து வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது. மழை நீர் வடிகால்களிலும் அடைப்பு ஏற்படுத்துகிறது.
இதனால், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில், 78 மெக்கானிக் ஸ்வீப்பர் வாகனங்களை கொண்டு, பேருந்து சாலைகள் சுத்தம் செய்யப்படுகிறது.
இந்த வாகனங்கள் வழியாக, ஒவ்வொரு மண்டலத்திலும், தினமும், 25 முதல் 30 கி.மீ., வரை சாலைகளை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
Advertisement