'மேன்ஹோல்' மூடப்படுமா?
காஞ்சிபுரம், கைலாசநாதர் கோவில் அருகில், திடீர் நகர் சாலையில், வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேறுவதற்காக பைப் லைன் அமைக்கப்பட்டுள்ளது. அடைப்புகளை நீக்குவதற்காக அமைக்கப்பட்டுள்ள 'மேன்ஹோல்' மீது சிமென்ட் சிலாப் போட்டு மூடப்படாமல் உள்ளது.
இதனால், இரவு நேரத்தில் அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகளும், இருசக்கர வாகன ஓட்டிகளும் பள்ளத்தில் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, 'மேன்ஹோல்' மீது சிமென்ட் சிலாப் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- டி.மதனகோபால், காஞ்சிபுரம்.
தேங்கும் கழிவு நீர்
காஞ்சிபுரம் மாநகராட்சி, வேதாசலம் நகர், நேதாஜி தெருவில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் வீட்டு உபயோக கழிவு நீர் வெளியேற கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
இக்கால்வாயில் விடப்படும் கழிவு நீர், வெளியேற வழியில்லாமல் ஒரே இடத்தில் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதோடு, கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.
இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நேதாஜி தெருவில் பாதாள சாக்கடை வசதி ஏற்படுத்த வேண்டும்.
- கே.கண்ணன், காஞ்சிபுரம்.
Advertisement