சாயல்குடி--சாயல்குடி அருகே சேரந்தை கிராமத்தை சேர்ந்தவர் ராமசாமி 42. இவர் சாயல்குடியில் டிஜிட்டல் பிளக்ஸ் கடை நடத்தி வருகிறார்.
ஜன.31ல் தனது சட்டையை கழட்டி அருகில் இருந்த சேரில் வைத்துவிட்டு சென்றுஉள்ளார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 3000 திருடு போனது.போலீசில் புகார் அளிக்கவில்லை.
இந்நிலையில் நேற்று காலை அறிமுகம் இல்லாத ஒருவர் திருடு போனதை பற்றி கேட்டுஉள்ளார். யாருக்கும் தெரியாத விஷயத்தை கேட்டதால் சந்தேகம் ஏற்பட்டு அவரை விசாரித்ததில் எஸ்.கீரந்தையை சேர்ந்த முத்து 35, என தெரிந்தது.
முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால் புகாரில் சாயல்குடி போலீசார் முத்துவை கைது செய்து முதுகுளத்தூர் சிறையில் அடைத்தனர்.