காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி ஊராட்சி, பாக்குப்பேட்டையில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், கடந்த 2018 -- 19ல், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில், 20 ஆயிரம் ரூபாய் செலவில், கால்நடைகளுக்கான குடிநீர் தொட்டி கட்டப்பட்டது.
கால்நடை தொட்டி திறக்கப்பட்ட ஒரு நாள் மட்டும், தொட்டியில் தண்ணீர் நிரப்பப்பட்டது. கால்நடை தொட்டிக்கு என, 'பைப் லைன்' அமைத்து, குழாய் வசதி ஏற்படுத்தவில்லை என, அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதனால், கால்நடை தொட்டி வீணாகி வருவதோடு, மேய்ச்சலுக்கு சென்று வரும் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளின் தாகம் தீர்க்க வசதி இல்லாத நிலை உள்ளது.
எனவே, கோடை காலம் துவங்க உள்ள நிலையில், கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில், தொட்டிக்கு பைப் லைன் அமைத்து, தினமும் தொட்டியில், குடிநீர் நிரப்ப, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Advertisement