சென்னை, 'டான்சி' நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்த, விற்பனையகம் மற்றும் மின் வணிக இணைய தளம் துவங்கப்பட்டது.
'டான்சி' எனப்படும் தமிழக சிறு தொழில் நிறுவனத்தில் உற்பத்தியாகும் பொருட்களை சந்தைப்படுத்த திட்டமிடப்பட்டது. இதன் படி, விற்பனையகம் மற்றும் மின் வணிக இணைய தளம், நேற்று, கிண்டி, டான்சி தலைமை அலுவலகத்தில் துவங்கப்பட்டது.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர், விற்பனையகம் மற்றும் மின் வணிக இணைய தளத்தை துவக்கி வைத்தார்.
பின், மின் வணிக இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு, பொருட்கள் விற்பனை செய்தார்.
தொடர்ந்து, டான்சி நிறுவனத்தில் பணியில் இருந்தபோது உயிர்நீத்த மூன்று ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணி ஆணை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், டான்சி நிறுவன முதன்மை செயலர் விஜயகுமார், எம்.எஸ்.எம்.இ.,யின் அரசுத்துறை செயலர் அருண் ராய் மற்றும் டான்சி நிறுவன ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
Advertisement