வியாசர்பாடி, வியாசர்பாடி, சாஸ்திரி நகர் 11வது தெருவைச் சேர்ந்தவர் அப்புனு. இவரது மனைவி கண்ணகி, 55. மகன் அஜய், 22. ரயில்வேயில் ஒப்பந்த தொழிலாளியாக பணிபுரியும் அஜய் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்.
வழக்கம்போல, நேற்றும் மதுஅருந்த பணம் கேட்டு தாயிடம் தகராறில் ஈடுபட்டார்.
அவர் மறுக்கவே, பீர் பாட்டிலால் தாயின் தலையில் அடித்து தப்பினார்.
இதில் காயமடைந்த கண்ணகியை, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார் அஜயை கைது செய்தனர்.