சென்னை,மாநிலங்களுக்கு இடையிலான, யு.டி.டி., 84வது டேபிள் டென்னிஸ் போட்டிகள், சென்னை, பெரியமேடு, நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று துவங்கின. போட்டிகளை அமைச்சர் உதயநிதி துவக்கினார்.
நிகழ்வில், தமிழக டேபிள் டென்னிஸ் சங்கத் தலைவர் தேவநாதன் தலைமை தாங்கினார்.
நேற்று, 19 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கான குழுப் போட்டிகளில் மஹாராஷ்டிரா, ஹரியானா, கர்நாடகா, மேற்கு வங்கம், தமிழகம், டில்லி மற்றும் கேரளாவைச் சேர்ந்த அணிகள், ஏ முதல் ஜி வரையிலான பிரிவுகளில் விளையாடின.
ஹெச் பிரிவில் விளையாடிய குஜராத் - உபி., அணிகளுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவியது. 'சி' பிரிவில், கர்நாடகா அணி, உத்தரகாண்ட் அணியையும், 'டி' பிரிவில், மேற்கு வங்க பெண்கள் அணி, அசாம் அணியையும் வென்றது. 'எப்' பிரிவில் டில்லி - ராஜஸ்தானையும், 'ஜி' பிரிவில், கேரளா,- பீஹாரை வென்றது.
தமிழகத்தைச் சேர்ந்த காவ்யாஸ்ரீ பாஸ்கர், தெலுங்கானா அணியின் சத்யா அஸ்பதியை 9 - -11, 11 - -7, 10 - -12, 11-- 3, 11 - -9 என்ற கணக்கில் தோற்கடித்தார்.