கூடலுார் : கூடலுார் தேவாலா அருகே இயங்கி வரும் தனியார் தார் கலவை ஆலையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசு காரணமாக, அங்கு வசிக்கும் மக்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது.
இதனால், ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற கோரி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
கூடலுார் எம்.எல்.ஏ., பொன் ஜெயசீலன் நிருபர்களிடம் கூறுகையில்,''இந்த பிரச்னை தொடர்பாக, தனி நபர் ஒருவர் சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். இதற்கு, மாநில அரசு இரண்டு வாரத்தில் பதில் அளிக்க, கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எனவே, தார் கலவை ஆலையை வேறு இடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.