மேட்டுப்பாளையம் : மத்திய அரசு கண்டித்து மேட்டுப்பாளையத்தில் காங்., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது
எல்.ஐ.சி., எஸ்.பி.ஐ., மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை, தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து, மேட்டுப்பாளையத்தில், பஸ் ஸ்டாண்ட் அருகே, காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். மாநில பொது செயலாளர் கணேசன் மூர்த்தி, துணைத்தலைவர் அழகு ஜெயபால், வட்டாரத் தலைவர் ராஜேந்திரன், மேட்டுப்பாளையம் நகர தலைவர் தங்கமணி, அகில இந்திய இளைஞர் அணி செயலாளர் நவீன் குமார் உள்பட பலர் பேசினர் .
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் போட்டனர். கூட்டத்தில் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கவுன்சிலர்கள் ஆகியோர் பங்கேற்றனர். காரமடை நகரத் தலைவர் துரைசாமி நன்றி கூறினார்.