கூடலுார் : கூடலுார் நகருக்குள் இரண்டு காட்டெருமைகள் நுழைந்ததால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கூடலுார் பழைய பஸ் ஸ்டாண்ட் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணிக்கு, இரண்டு காட்டெருமைகள் நுழைந்ததை பார்த்த வாகன ஓட்டுனர்கள் அச்சமடைந்தனர். தகவலின் பேரில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.எஸ்.ஐ., லட்சுமணன், போலீசார் கருணாகரன், வன ஊழியர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள் காட்டெருமைகளை விரட்டினர். இரண்டு கி.மீ., நடந்து சென்ற காட்டெருமைகள், மார்த்தோமா நகர் அருகே, வனப்பகுதிக்குள் சென்றன. இதனால், டிரைவர்கள் நிம்மதி அடைந்தனர்.