விக்கிரவாண்டி-விக்கிரவாண்டி சூர்யா பாலிடெக்னிக் கலலுாரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
கல்லுாரி வளாகத்தில் நடந்த முகாமிற்கு நிர்வாகி விசாலாட்சி பொன்முடி தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் டாக்டர் வெங்கடேஷ் வரவேற்று பேசினார்.
புதுச்சேரியில் ஏஷன் பவர் குவாலிட்டி பி. லிட். நிறுவனத்தைச் சேர்ந்த மனிதவள மேலாளர் பாஸ்கரன் வேலை வாய்ப்புகள், துறை பணிகள்குறித்து மாணவர்களிடம் பேசினார்.
இரு கட்டங்களாக நடந்த முகாமில் 44 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அனைத்து மாணவர்களுக்கும் கல்லுாரி நிர்வாகம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
முகாமிற்கு அனைத்து துறைத் தலைவர்கள் ,ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வேலை வாய்ப்பு அலுவலர் சரண் குமார் நன்றி கூறினார்.