அன்னுார் : விவசாயிகள் சங்கத்தின் (ஜாதி, மதம், கட்சி சார்பற்றது) பொதுச் செயலாளர் கந்தசாமி கோவில்பாளையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது;
கோவை மாவட்டத்தில் கல்லாறில் மட்டுமே யானை வழித்தடம் உள்ளது. மற்ற இடங்களில் யானை வழித்தடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விக்கு வனத்துறையினர் பதில் அளித்துள்ளனர்.
இல்லாத யானை வழித்தடத்தை குழு அமைத்து கண்டறிந்து விவசாயிகளுக்கு இடையூறு செய்வதை கண்டிக்கிறோம். ஒவ்வொரு வாரமும் ஒரு விவசாயி வனவிலங்குகளால் இறக்கிறார். யானை வழித்தடத்தை கண்டறிய அமைத்துள்ள குழுவை கலைக்க வேண்டும்,
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.