திருவல்லிக்கேணி, புதுக்கோட்டையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், திருமண தகவல் மையத்தில் மாப்பிள் ளை வரன் தேடினார்.
இதை பார்த்து, வேலுார், காந்தி நகரைச் சேர்ந்த முகமது உபேஸ், 37, என்பவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.
பின், இருவரும் பேசி வந்துள்ளனர். கடந்த டிச., 13ம் தேதி, சென்னை, ராயப்பேட்டையில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் சந்தித்தனர். அங்கு சென்டிமென்டாக பேசி 20 சவரன் நகையை வாங்கி சென்ற முகமது உபேசை, அதன் பின் தொடர்புள்ள முடியவல்லை.
இது குறித்து, அண்ணாசாலை போலீசார் விசாரித்தனர். இதில், விதவை பெண்கள் உள்ளிட்டோரை குறிவைத்து, திருமணம் ஆசை காட்டி நகை-, பணம் வாங்கி ஏமாற்றியது தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்து, 1 லட்சம் ரூபாய், ஒன்றரை சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.