கண்ணகி நகர், ஓ.எம்.ஆர்., காரப்பாக்கத்தில், பாக்கியம் பிரகதி என்ற அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்குள்ள சங்க நிர்வாகிகள், கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய, மேற்கு சி.ஐ.டி., நகரில், 'பெஸ்ட் மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்தை அணுகினர்.
இந்நிறுவன மேலாளர் மணிகண்டன், 35, என்பவர், நேற்று முன்தினம் மாலை, குன்றத்துாரைச் சேர்ந்த செந்தில்குமார், 45, அருள், 43, பிரவீன், 19, ஆகியோரை, அப்பணிக்கு அனுப்பினார்.
தொட்டிக்குள், செந்தில்குமார், பிரவீன் ஆகியோர் இறங்கினர். இதில், செந்தில்குமார் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தார். பிரவீன் உடனே வெளியேறினார்.
மருத்துவமனைக்கு துாக்கி செல்லும் வழியில், செந்தில்குமார் பலியானார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார், மேலாளர் மணிகண்டன் மீது வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.